
நடிகர் கவுண்டமணிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்தி வந்ததும் சினிமா பிரலபலங்கள், ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களிடம் கவுண்டமணியின் மனைவி, ‘’அவருக்கு நெஞ்சு வலி வந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இப்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளார். ஒன்றும் பிரச்சனையில்லை’’என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் இன்று திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று செய்தி வந்தது.
இந்த செய்தி குறித்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் கவுண்டமணி, ‘’வேறொன்னுமில்ல... கழுத்து வலின்னு ஆஸ்பத்திரிக்கு போனேன். வலி ரொம்ப தாங்கல. தங்கியிருந்த பாத்துட்டு போகலாம்னு இங்கேயே இருந்துட்டேன்.
இது குத்தமாய்யா... நெஞ்சு வலி, சீரியஸ்னு கதைய முடிக்க பாக்குறாங்களே... ’’என்று நொந்துகொண்டிருக்கிறார்.
கவுண்டமணி மருத்துவமனையிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு வியாழனன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்கிற வழக்கம் உள்ளவர் அவர்.
இந்த வியாழக்கிழமையும் கோயிலுக்கு போக வேண்டும் என்பதால், ’’கோயிலிக்கு போயிட்டு வந்துடறேனே..’’என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறாராம்.
கவுண்டமணி மரணம் என்பது வெறும் வதந்திதான்