2000yr old Thirukural

Saturday, November 7, 2009

அமெரிக்காவில் 27 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை!

வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190000 பேர் வேலை இழந்துள்ளனர்.

இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.

"நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்" என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.

No comments:

Blog Archive