2000yr old Thirukural

Tuesday, November 10, 2009

5 லட்சம் விலங்குகளை பலியிடும் விழா

காட்மண்டு,

நேபாள நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை விலங்குகளை பலியிடும் பிரமாண்ட விழா நடந்து வருகிறது.

லட்சக்கணக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி, புறா போன்றவை இந்த விழாவில் பலியிடப்படும். நேபாள பெண் கடவுளான காதிமையை சாந்தப்படுத்த இந்த பரிகார பூஜை நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு வரும் 24-ந்தேதி விலங்குகளை பலியிடும் விழா நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 5 லட்சம் ஆடு, மாடு, கோழி, பன்றி, புறா, வாத்து போன்றவை பலியிடப்படும். பர மாவட்டத்தில் உள்ள பரியாபூர் என்ற ஊரில் இந்த பரிகார விழாவுக்கு பிரமாண்ட எற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவில் சுமார் 50 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 லட்சம் விலங்குகள், பறவைகள் ஒரே இடத்தில் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகின் பல்வேறு அமைப்புகள் நேபாள நாட்டுக்கு கோரிக்கை விடுத்தன. மேனகா காந்தியும் நேபாள பிரதமர் மாதவ்குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் 5 லட்சம் விலங்குகள் பலியிடப்படும் விழாவை தடுக்க இயலாது என்று நேபாள உள்துறை மந்திரி பிம்ரவல் கூறி விட்டார். மக்களின் ஆன்மீக நம்பிக்கையில் தலையிட அரசு விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
உலகிலேயே அதிக அளவு விலங்குகள் ஒரே சமயத்தில் பலியிடப்படுவது இந்த விழாவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து பீகார், உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments:

Blog Archive