ச்சேச்சே ரகுமானா இப்படி! என ஒரு கணம் மிரண்டுதான் போனேன்..!
இப்படிப்பட்ட ஒரு பாடலுக்கா ஆஸ்கார் கொடுத்தார்கள் என்று மிரட்சியாய் இருந்தது. அதிர்ச்சி ஒரு பக்கம்.. இன்றைக்கு இளையாராஜா என்றொரு மேதையை குப்பையில் போட்டு கொழுத்தும் ரஹ்மான் ரசிகர்களுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்!
எம்.எஸ்.வீயின் இசையில் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வருகிற பாடல் அது. அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை! என துவங்கும் பாடலை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடி இருப்பார். பலரையும் கவர்ந்த அதே பாடலின் மெட்டில் ரஹ்மானின் இசையில் ஜெய் ஹோ!
என்ன கொடுமை சார் இது! தமிழனுக்குத்தான் மூளை இல்லை! இந்தியனுக்கு தமிழ்பாட்டு தெரியாது! இசை ஆர்வலர்கள் கூட ஏமாந்து போனதுதான் ஆச்சர்யம்!
ஜெய் ஹோ பாடலில் அந்த ஜெய் ஹோவை மட்டும் தூக்கிவிட்டு மீதிப்பாடலை கேட்டால்.. அப்படியே எம்.எஸ்.வீயின் அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை!
ஏ.ஆர்.ரஹ்மான் இனிமேலாவது தமிழ்ப்பாடல்களில் இருந்து மெட்டுக்களை சுடாமல் ஃபாரின் பாடல்களில் இருந்து சுடலாம்..( எஸ்.எஸ்.மியூசிக்கில் அதுக்கும் ஆப்படிக்கிறார்களாம் ஜாக்கிரதை!). அல்லது சுட்டாலும் அந்த பாடல் எங்கிருந்து சுடப்பட்டதோ அவருக்கு ஒரு நன்றி சொல்லிவிடலாம்! பாவமில்லையா எம்.எஸ்.வீ!
சிலர் இதற்கான ராகங்களின் அடிப்படைகளை சொல்லலாம்.. சத்தியமாக எனக்கு ராகங்கள் பற்றி தெரியாது.. ஆனால் ஒரே மாதிரி பாடல் மெட்டு போட்டால் அதன் பெயர் அட்டை காப்பி என்பது மட்டும் நிச்சயம் தெரியும்!
இனி பாடல்கள்!
ரஹ்மான் ஆட்டைப்போட்ட ஒரிஜினல் சாங்! அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை!
|
No comments:
Post a Comment