2000yr old Thirukural

Saturday, September 25, 2010

ஆஸ்கருக்கு போகிறது- ஆமிர்கானின் ‘பீப்லி லைவ்’

புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வெளியாகும் படங்களிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் தேர்வு கமிட்டி பரிந்துரை செய்து வருகிறது. 2010ம் ஆண்டுக்கு தேர்வான படத்தை இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் தலைமையில் அமைந்த 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது. இதுபற்றி சேதுமாதவன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ், இந்தி, மலையாளம், வங்காளம், கொங்கனி மொழியில் உருவான 27 படங்களை கடந்த 19ம் தேதி முதல் 24ம் தேதிவரை தேர்வுக் குழுவினர் பார்த்தனர்.

இதில் ஆமிர்கான் தயாரித்த ‘பீப்லி லைவ்’ என்ற படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்றார். பீப்லி லைவ் படத்தை ஆமிர்கான் தயாரித்திருந்தார். விவசாயிகள் பிரச்னையை மையமாக வைத்து உருவான இப்படத்தை அனுஷா ரிஸ்வி இயக்கி உள்ளார். புதுமுகம் ஓம்கார் தாஸ் மாணிக்புரி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

No comments:

Blog Archive