2000yr old Thirukural

Thursday, October 7, 2010

மன உளைச்சலை அக்ரூட் தீர்க்கும்

அலுவலக வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் மன உளைச்சலால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அக்ரூட் கொட்டையை (வால்நட்) சாப்பிடுவதன் மூலம் இதிலி ருந்து விடுபடலாம் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவின் நார்த் கரோலினா பல்கலைக்கழக த்தின் உடல்நல பிரிவு பேராசிரியர் ஷெய்லா ஜி வெஸ்ட் தலைமையிலான குழுவினர் மன உளைச்சலை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வால்நட் மற்றும் வால்நட் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவு கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் சீராக இருந்தது தெரிய வந்தது. அத்துடன் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் கட்டுப்படுத்தியது. மன உளைச்சல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. எனவே, வால்நட் மன உளைச்சலைக் குறைக்கும் என வெஸ்ட் தெரிவித்து ள்ளார்.

வால்நட்டில் நார் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒமேகா 3 அமிலம் ஆகியவை உள்ளன. இது வேலை பளுவால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து விடுபட உதவுகிறது. இதனால் இதய நோய் பாதிப்பிலிருந்தும் விடுபட முடியும்ÕÕ என்று வெஸ்ட் தெரிவித்தார்.

1 comment:

Anonymous said...

Boos matter ra kapathitinga., Thanks

Blog Archive